1945 ஆம் ஆண்டுக்கு முன் பசறையில் உள்ள பாடசாலையான கெமுனு மகா வித்தியாலயத்தில் தமிழ் மொழி சிங்கள மொழி மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஒன்றாகவே நடைபெற்றது.
1945 ஆம் ஆண்டு தமிழ் மொழி சிங்கள மொழி வேவ்வேறாக பிரித்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது வேலாயுதம் என்பவர் கடமையாற்றியிருந்தார்.
1962 ஆம் ஆண்டு கெமுனு பாடசாலையில் இருந்து பசறை மத்திய மகா வித்தியாலயத்திற்கு கொண்டு வரப்பட்டு காலை 8.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை சிங்கள மொழி மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளையும் பகல் 1.00 பின்னர் தமிழ் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்றது
1964 ஆம் ஆண்டு பசறை மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து பிபிலை வீதி 13 ஆம் கட்டை பொல்காலந்த எனும் இடத்தில் தமிழ் பாடசாலை தனியாக பிரித்து கொண்டுவரப்பட்டது. கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் தனியான ஓர் மண்டபத்தில் நடைபெற்றது.
1991 ஆம் ஆண்டு பசறை தமிழ் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக மாற்றம் பெற்றது.