பாடசாலை கீதம்
வாழிய வாழியவே
வாழியவே யென்றும் வாழியவே பசறை தமிழ் மகா வித்தியாலய மென்றும்
பணியினில் சிறந்த நிலையினி லுயர்ந்து
(வாழியவே)
கல்வியும் அறிவும் தழைத்திடவே கற்றோர் நாளும் பெருகிடவே வல்லவ ராயிரம் மாயிரம் படைத்து வற்றாத பொய்கை யாகவே சுரந்து
(வாழியவே)
கலைமணம் நாற்றிசைப் பரப்பிடவே கருணையு மன்பும் இலங்கிடவே மலையகத்தி லுயர் குன்றென நிலைத்து வரலாற்றில் ஞாலப் புகழுடன் திகழ்ந்து
(வாழியவே)
நல்லொலுக்க மெங்கும் நிலைத்திடவே நடுநிலை நல்லறம் சிறந்திடவே வல்லநல் லதிபர் ஆசான் சேவையில் வளம்நிறை அறிவுக் கடலென சிறந்து
(வாழியவே)
மங்களமாய் யென்றும் திகழ்ந்திடவே வாரியே வழங்குவோர் பெருகிடவே எங்கள் பாடசாலையின் நாமம் இனிதே யாவரின் ஆசியும் பெற்று
(வாழியவே)